உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவும் போசாக்கான உணவுகளை வழங்குவதற்காகவும் தேசிய ஒருமைப் பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR) 7.22 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கீரிமலை நகுலேஸ்வர ஆலய சூழலில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உள்ளூர் உணவு விற்பனை நிலையம் “அம்மாச்சி”, முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப் பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளருமான சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க அவர்களாலும், வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களாலும் 2018.04.02 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண மகளீர் விவகார சமூக சேவைகள் அமைச்சர் திருமதி. அனந்தி சசிதரன், அமைச்சின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள். திணைக்களத் தலைவர்கள் அப்பிரதேச மாதார்சங்கம் பொது அமைப்புக்கள் ஆகியோர் உட்பட பலர்கலந்து கொண்டனர்.